1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும்
3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர ப்ரம்மோத்ஸவம் - ஐந்து கருட சேவை
4.ஆறாம் நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்
ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.
விண்ணுலகிலுள்ள பரமபதத்திலும் காணக் கிடைக்காத ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மடியில் ஸ்ரீரங்கமன்னார் சயனத் திருக்கோலம் விண்ணுலகத்தவரும் வியந்து சேவிக்கும் அற்புதமான சேவை.
ஐந்தாம் பாசுரம் --- நீ என்ன செய்தாலும் நாங்கள் கோபப்படாமல் இருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா என்கிறார்கள்.
518
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்
விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால்
உரோடம் ஒன்றும் இலோம், கண்டாய்
கள்ள மாதவா! கேசவா! உன்
முகத்தன கண்கள் அல்லவே
கபடச் செயல்களையுடைய மாதவா! கேசவா!
வெளுத்துச் சிறுத்திருக்கும் மணல்களைக் கொண்டு நாங்கள் தெருவிலே எல்லோரும் ஆச்சர்யப்படும்படி தெளித்து இழைத்த அழகிய சிற்றில்களை நீ அழித்தாயாகிலும், எங்கள் நெஞ்சு உடைந்து உருகுமே தவிர, உன் மேல் சிறிதும் கோபப்படமாட்டோம்.
உன் திருமுகத்தில் இருப்பது கண்கள்தானே? அவற்றைக் கொண்டு நீயே பார்க்கலாமே.
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment