1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும்
3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர ப்ரம்மோத்ஸவம் - ஐந்து கருட சேவை
4.ஆறாம் நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்
5.ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.
8. திருபூரம் சாற்றுமுறையில் ஶ்ரீ ஆண்டாள்
9.பத்தாம் திருநாள் - ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம்...
10. ஸ்ரீ ஆண்டாள் முத்தாளத்தி வைபவம் ...
பத்தாம் பாசுரம் -- இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்களுக்குப் பலம் சொல்லி முடிக்கிறாள்.
சீதை வாய் அமுதம் உண்டாய்! எங்கள்
சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர்
சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ்
வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு
இன்றி வைகுந்தம் சேர்வரே 10
ஸீதாப் பிராட்டியின் அதராம்ருதத்தைப் பருகினவனே! “நாங்கள் கட்டும் சிற்றில்களை நீ சிதைக்காதே” என்று சொல்லும், வீதியில் விளையாடும் இடைப் பெண்களுடைய மழலைச் சொற்களை உட்கொண்டு, வேதம் சொல்லும் வாயை உடையவர்களும், வேதத்தில் சொல்லப்படும் கர்மங்களைச் செய்பவர்களுமான மேன்மக்கள் வாழுமிடமான ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய (என்னுடைய) தமிழ்ப் பாசுரங்களை ஓதவல்லவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் பரமபதத்தை அடைவார்கள்.
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment