23 July 2025

4. புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...

ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்

நான்காம் திருநாள் -

மூலவர் - புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்)

உற்சவர் - கஜேந்திர மோக்ஷம்,  


















நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  

 நான்காம் பாசுரம்  -  இதில் தன்னுடைய வருத்தத்தின் மிகுதியைத் தெரிவிக்கிறாள்.


507

சுவரில், புராண! நின்  பேர் எழுதிச்

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்

கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் 

காட்டித் தந்தேன், கண்டாய் காம தேவா!

அவரைப் பிராயம் தொடங்கி என்றும் 

ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

 தொழுது வைத்தேன், ஒல்லை விதிக்கிற்றியே 4


பழையவனே! சுவர்களில் உன்னுடைய பெயர்களை எழுதி, சுறா மீன்கள் வரையப்பட்டிருக்கும் கொடிகளையும், குதிரைகளையும், சாமரங்களையுடைய பெண்களையும், கரும்பு வில்லையும் உனக்கு ஸமர்ப்பித்தேன் பார். சிறுவயது முதல் எப்பொழுதும் விரும்பிக் கிளர்ந்த என்னுடைய பெரிய முலைகள் த்வாரகைக்குத் தலைவனான கண்ணனுக்கே என்று நினைத்துக்கொண்டு தொழுதிருந்தேன். விரைவாக நீ என்னை அவனுக்கு ஆக்க வேண்டும்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment