ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
2.இரண்டாம் திருநாள் - ருக்மணி கல்யாணம்
மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)
உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்
மூலவர் - புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்)
மூலவர் - பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை)
6.ஆறாம் திருநாள்
மூலவர் - திருப்பாற்கடல் நாதன் ( கேசவ நம்பி)
உற்சவர் - ஶ்ரீஆண்டாள் கேசவநம்பியின் கால் பிடித்தல்
ஆறாம் பாசுரம்-- இதில் பகவானை அனுபவிக்க முற்படும்போது, ஸத்வ குணத்தில் ஊறியவர்களுடன் கூடி அனுபவிப்பது போலே, காம சாஸ்த்ரத்தில் வல்லவர்களுடன் கூடிச் சென்று எம்பெருமானை அடைவதற்காகக் காமனை ப்ராத்திக்கிறாள்.
509
உருவுடையார் இளையார்கள் நல்லார்
ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள்
திருந்தவே நோற்கின்றேன், காம தேவா!
கருவுடை முகில் வண்ணன், காயாவண்ணன்
கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால்
திருந்தவே நோக்கு எனக்கு அருள் கண்டாய் 6
மன்மதனே! அழகிய வடிவுடையவர்களாய், யுவாக்களாய், நன்னடத்தை உள்ளவர்களாய் இருக்கும் காம சாஸ்த்ரத்திலே நிபுணர்களாய் இருப்பவர்களை முன்னிட்டுக்கொண்டு, தினமும் நீ வரும் வீதிகளில் எதிரே சென்று, பங்குனி மாதத்தில் உன்னுடைய உத்ஸவ ஸமயத்தில் உன்னைத் தெளிவுடன் வணங்குகிறேன்.
நீர் நிறைந்த கறுத்த மேகம் போன்ற நிறத்தையும் காயாம்பூ போன்ற நிறத்தையும் கருவிளைப்பூ போன்ற ஒளியையும், தாமரை மலர் போன்ற திருமுகத்தில் உள்ள திருக்கண்களாலே என் விஷயத்தில் அவன் கடாக்ஷம் பண்ணும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்.
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment