29 July 2025

9. ஸ்ரீ ராஜகோபாலன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம் 

4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-  

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

7.ஏழாம் திருநாள் -- அரங்கன் திருக்கோலத்தில்  ஶ்ரீஆண்டாள் 


9.ஒன்பதாம் திருநாள்
மூலவர் - ராஜகோபாலன்
உற்சவர் -  கவர்ந்துண்ணும் கண்ணன்


















நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  

ஒன்பதாம் பாசுரம் -- இதில் தனக்கு அருளாவிட்டால் அவனுக்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறாள்.


512

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித்

 தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்

பழுது இன்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே 

பணி செய்து வாழப் பெறாவிடில் நான்

அழுது அழுது அலமந்து அம்மா வழங்க 

ஆற்றவும் அது உனக்கு உறைக்கும், கண்டாய்

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து 

ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே 9


மூன்று காலங்களிலும் உன்னைத் தொழுது தலையாலே வணங்கி உன்னுடைய அடிகளில் தூய மலர்களைச் சமர்ப்பித்துச் சேவித்து ஸ்தோத்ரம் செய்கின்றேன். 

உலகைச் சூழ்ந்திருக்கும் கடல் போன்ற வடிவை உடையவனுக்குப் பழுதில்லாமல் தொண்டு செய்து நான் வாழ்ச்சியைப் பெறவில்லை என்றால், பலமுறை அழுது, தடுமாறி, அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டு திரிய, அந்தப் பலன் உனக்கே நன்றாகக் கிடைக்கும். ஏர் உழும் ஒரு எருதை நுகத்தடியாலே தள்ளி தீனி போடாமல் விரட்டுவதைப் போல அச்செயல் இருக்கும்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment