1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும்
3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர ப்ரம்மோத்ஸவம் - ஐந்து கருட சேவை
4.ஆறாம் நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்
4.ஆறாம் நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும் ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்
5.ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.
8. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்க மன்னார் திருவாடி பூர பிரம்மோற்சவம் திருபூரம் சாற்றுமுறை நந்தவனத்தில்....
எட்டாம் பாசுரம் -- எவ்வளவு இனிமையான பதார்த்தமானாலும், நெஞ்சில் கசப்பு இருந்தால், அது சுவையாக இருக்காது என்று தெரிந்துகொள் என்கிறார்கள்.
521
வட்ட வாய்ச் சிறு தூதையோடு
சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்!
கட்டியும் கைத்தால் இன்னாமை
அறிதியே கடல் வண்ணனே! 8
ஒளிபொருந்திய திருவாழியைத் திருக்கையில் ஏந்தி நிற்கும் எம்பெருமானே! கடல்போன்ற வடிவை உடையவனே!
வட்டமான வாயைக் கொண்ட சிறிய பானையோடு, சிறிய குச்சியையும் மணலையும் கொண்டுவந்து இஷ்டப்படி விளையாடும் எங்களுடைய சிற்றிலை மீண்டும் அழிப்பதனால் என்ன பயன்?
கையால் தொட்டும் காலால் உதைத்தும் துன்புறுத்தாதே.
நெஞ்சம் கசந்து போனால், சர்க்கரைக் கட்டியும் ருசிக்காது என்பதை அறிவாய்தானே?
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment