1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடி பூர உற்சவத்தை முன்னிட்டு
மூன்றாம் ஆம் நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும் ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் திரு வீதி உலா
இரண்டாம் பாசுரம் -- நாங்கள் மிகவும் முயன்று கட்டியிருக்கும் சிற்றில்களைச் சிதைக்காதே என்கிறார்கள்.
515
இன்று முற்றும் முதுகு நோவ
இருந்து இழைத்த இச் சிற்றிலை
நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும்
ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகன் ஆகி ஆலிலை
மேல் துயின்ற எம் ஆதியாய்!
என்றும் உன்தனக்கு எங்கள் மேல்
இரக்கம் எழாதது எம் பாவமே 2
இன்று முழுவதும் முதுகு நோகும்படி ஒரே இடத்தில் அசையாமல் இருந்து முயன்று செய்த இந்தச் சிற்றிலை நாங்கள் நன்றாகப் பார்த்து அனுபவிக்கும்படி எங்கள் ஆசையை நிறைவேற்று. மஹா ப்ரளயம் வந்த காலத்திலே ஒரு சிறு குழந்தையாகி ஓர் ஆலந்தளிரிலே சயனித்திருந்தவனாய் எங்களுக்குக் காரணபூதனானவனே! உனக்கு எங்கள் விஷயத்தில் எப்பொழுதும் இரக்கம் இல்லாமல் இருப்பதற்கு எங்கள் பாபமே காரணமாகும்.
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment