22 July 2025

2. ருக்மணி கல்யாணம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்













நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  

இரண்டாம் பாசுரம்- தன் நோன்பின் க்ரமத்தை இன்னும் விரிவாக உரைத்து, “எம்பெருமானிடம் என்னைச் சேர்க்கவேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறாள்.

505

வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
 வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து 
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா!
கள் அவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு 
கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் 
இலக்கினில் புக என்னை எய்கிற்றியே 2



மன்மதனே! வெள்ளை நிறத்தில் நுண்ணியதாய் இருக்கும் மணல் (கோலப்பொடி) கொண்டு அவன் வரும் வீதியை அலங்கரித்து விடிவதற்கு முன்னே நதிக்கரைக்குச் சென்று நன்றாக முழுகி நீராடி, முள் முதலானவை இல்லாத விறகுச் சுள்ளிகளை நெருப்பில் போட்டு உன் விஷயமாக நோன்பை அனுஷ்டிக்கிறேன். தேன் ஒழுகும் புஷ்பங்களாகிற உன் காதல் கணைகளைத் தொடுத்துக் கடல் போன்ற திருநிறத்தை உடையவனான எம்பெருமான் என்கிற இலக்கில் போய் நான் அவனை அணைக்கும்படி நீ என்னைச் செலுத்த வேண்டும்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment