27 July 2025

8. திருவேங்கமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம் 

4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-  

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

7.ஏழாம் திருநாள் -- அரங்கன் திருக்கோலத்தில்  ஶ்ரீஆண்டாள் 

8.எட்டாம் திருநாள்
மூலவர் - திருவேங்கமுடையான்
உற்சவர் -  பூவராகன்













நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  

எட்டாம் பாசுரம் -- இதில் தன்னுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த செயலான எம்பெருமானுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வதை அருளுமாறு கேட்கிறாள்.


510

மாசு உடை உடம்பொடு தலை உலறி 

வாய்ப்புரம் வெளுத்து ஒரு போதும் உண்டு

தேசு உடைத் திறல் உடைக் காம தேவா! 

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்

பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்! 

பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்

கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் 

என்னும் இப்பேறு எனக்கு அருள்  கண்டாய் 8


ஒளியையும் சக்தியையும் உடையவனாய் எனக்கு ஸ்வாமியாய் இருக்கும் மன்மதனே! அழுக்குப்படிந்த உடம்போடும் விரித்த கூந்தலோடும், வெளுத்த உதடுகளோடும், ஒரே வேளை உண்டும் நான் செய்யும் இந்த நோன்பை எப்போதும் நினைவில் வைத்துக்கொள். 

இப்போது, நான் சொல்லவேண்டுவது ஒன்றுண்டு. 

என் இருப்பு உயர்ந்த நிலையை அடையும்படி கேசி என்ற அஸுரனைக் கொன்றவனாய் அதனாலே கல்யாண குண பூர்த்தி உள்ளவனுக்கு திருவடி சேவை செய்யும் இந்த பேற்றை எனக்கு நீதான் பெற்றுத் தர வேண்டும்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment