22 July 2025

3. கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

முதல் நாள் - சேது பந்தம்

இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்














நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  

மூன்றாம் பாசுரம்-  நான் உன்னை நிந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீ என்னை திருவேங்கடமுடையானிடத்தில் சேர்த்து விட வேண்டும் என்கிறாள்.


506

மத்த நன் நறுமலர் முருக்க மலர் 

கொண்டு முப்போதும் உன் அடி வணங்கி

தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து 

வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே

கொத்து அலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு 

கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி

வித்தகன் வேங்கட வாணன் என்னும்

 விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே  3


ஊமத்தையின் நல்ல மலர்களையும், முருக்க மலர்களையும் கொண்டு மூன்று வேளைகளிலும் உன்னுடைய கால்களில் விழுந்து வணங்கி, அதற்குப் பிறகும் என் ஆசை நிறைவேறாமல் இருந்தால்,

 “இவன் நமக்கு உதவுகிறேன் என்று சொல்லி அந்த வாக்கை மீறியவன்” என்று நெஞ்சில் வருந்தி, 

வாயாலும் உன்னை நிந்தியாதபடி, 

கொத்துக்கொத்தாக மலர்கின்ற மலர்க்கணைகளைத் தொடுத்துக்கொண்டு, கோவிந்தன் என்று சொல்லப்படும் ஒரு திருநாமத்தை உன் நெஞ்சில் எழுதி வைத்துக் கொண்டு, வியத்தகு தன்மையனான திருவேங்கடமுடையான் என்று சொல்லப்படும் விளக்கினில் நான் சென்று சேருமாறு என்னை நீ நியமிக்க வேண்டும்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment