22 July 2025

1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்  ஸ்ரீவில்லிபுத்தூர்

1.முதலாம் திருநாள் காலை

கொடியேற்றம் (துவஜாரோஹணம்)







முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்








இரண்டாம்  நாள் இரவு 

ஸ்ரீ ஆண்டாள்  -   சந்திரப் பிரபை வாகனத்தில் 

ஸ்ரீ ரெங்கமன்னார் - சிம்ம வாகனத்தில் புறப்பாடு






நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 




எம்பெருமான் இப்படி இவர்கள் வேறு தேவதையான மன்மதனின் காலில் விழுந்து ப்ரார்த்திக்கும்படி இவர்களை நாம் கைவிட்டோமே என்று மனம் நொந்தான். 

திருவாய்ப்பாடியில் தான் இருந்த காலத்தில் அங்கிருந்த இடையர்கள் இந்த்ரனுக்குப் படையல் வைக்க, பரதெய்வமான நாம் இங்கே இருக்கும்போது தாழ்ந்த தேவதையான இந்த்ரனை இவர்கள் வணங்குகிறார்களே என்று வருந்தி அவர்களை கோவர்தன மலைக்கே அந்தப் படையலை வைக்கும்படிச் செய்து தானே அதை உண்டானே. 

அதே போல தன்னையே நம்பி இருக்கும் ஆண்டாளும் அவள் தோழிகளும் மற்ற தேவதையிடத்திலே செல்லும்படித் தான் வைத்ததை நினைத்துப் பார்த்து, இனி இவர்களை நாம் காக்கவைக்கக் கூடாது என்றெண்ணி இவர்கள் இருக்கும் இடத்துக்கு வர, 

இவர்களோ அவனிடத்தில் கோபம் கொண்டு சிற்றில் (சிறு மணல் வீடு) கட்டி விளையாடுவதாக அவனை மதிக்காமல் இருந்தனர். 

அதைக்கண்டு அவன் இவர்களுடைய சிற்றில்களை அழிக்கப் பார்க்க, இவர்கள் அதைத் தடுக்க, இவ்வாறு பெரும் ஊடலுக்குப் பின் கூடலும் அதற்குப் பின் மீண்டும் பிரிவாக முடிந்தது.


முதல் பாசுரம் -  இது பங்குனி மாதம் ஆகையாலே மன்மதன் வரும் வழியில் நாங்கள் சிற்றில் இழைக்கிறோம். இதை நீ கலைப்பது சரியன்று என்கிறார்கள்.


514

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற 

நாராயணா! நரனே! உன்னை

மாமி தன் மகனாகப் பெற்றால் 

எமக்கு வாதை தவிருமே

காமன் போதரு காலம் என்று 

பங்குனி நாள் கடை பாரித்தோம்

தீமை செய்யும் சிரீதரா! எங்கள் 

சிற்றில் வந்து சிதையேலே  1


எம்பெருமான் நர நாராயண ரிஷிகளாக அவதாரம் செய்ய, தேவர்கள் எம்பெருமானுடைய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்வதாகவும், பரமபதத்தில் இருக்கும் நாராயணா என்றும் ஸ்ரீ ராமனாக நர ரூபத்தில் அவதரித்தவனே என்றும் நித்யஸூரிகள் எம்பெருமானுடைய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்வதாகவும் இரண்டு அர்த்தம். 

அப்படிப்பட்ட எம்பெருமானே! எங்கள் மாமியான யசோதைப் பிராட்டி உன்னைத் தன்னுடைய மகனாகப் பெற்றால், எங்களுக்குத் துன்பப்படுவதில் இருந்து விடுதலை கிடைக்குமா? 

மன்மதன் வரும் காலம் என்று பங்குனி மாதத்தில் அவன் வரும் வழியை அலங்கரித்தோம்.

தீம்புகளை செய்யுமவனாய், ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனே! நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து எங்களுடைய சிற்றில்களைச் சிதைக்காதே.



ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment