31 December 2017
30 December 2017
29 December 2017
28 December 2017
27 December 2017
26 December 2017
25 December 2017
24 December 2017
23 December 2017
22 December 2017
21 December 2017
20 December 2017
19 December 2017
18 December 2017
17 December 2017
தொண்டரடி பொடியாழ்வார்
இன்று (17.12.2017) தொண்டரடி பொடியாழ்வார் அவதார தினம் .....
மார்கழியில் கேட்டை.....
![]() |
தொண்டரடி பொடியாழ்வார் வாழி திருநாமம்!
மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே..!
16 December 2017
திருப்பாவை 1 ...
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழு நிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
11 December 2017
10 December 2017
08 December 2017
04 December 2017
ஆழ்வார்கள் தரிசனம்..
வாழ்க வளமுடன்...
முந்தைய பதிவுகளில்
திருமங்கையாழ்வார் அவதார பற்றியும்
திருப்பாணாழ்வார் அவதாரம் பற்றியும் ..தரிசித்தோம்...
இன்று அவர்களின் புகைப்பட உலா...
போன வருடம் .....அப்பா ஆழ்வார்களின் அவதார தலங்களில் தாம் தரிசித்து எடுத்த படங்கள் இன்று ..இங்கே ஆழ்வார்கள் தரிசன உலாவாக...
திருமங்கையாழ்வார்......
03 December 2017
திருப்பாணாழ்வார்
இன்று (3.12.2017) திருப்பாணாழ்வார் அவதார தினம் .....
கார்த்திகையில் ரோஹிணி..
![]() |
![]() |
திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்!
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே...!
02 December 2017
திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார்
இன்று (2.12.2017) சனிக்கிழமை திருமங்கையாழ்வார் அவதார தினம் ..... கார்த்திகையில் கார்த்திகை
திருமங்கையாழ்வார் வாழி திருநாமம்!
கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே .....!

01 December 2017
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

30 November 2017
கைசிக ஏகாதசி
கைசிக ஏகாதசி மஹாத்மியம்
இன்று கைசிக ஏகாதசி (30.11.2017)
கைசிகப் புராணம்....., வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக உரைத்த பெருமை கொண்டது.
இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்..
பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க ....
அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்றும்
இவ்வாறு கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு....,
வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்..

27 November 2017
The Blue Umbrella ..ரஸ்கின் பாண்ட்
வாழ்க வளமுடன்,
சில மாதங்களுக்கு முன் பையனுக்கு பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. அதாவது ஆங்கில இலக்கியத்தில் ஏதேனும் இரு எழுத்தாளர்களை பற்றி scrab book செய்யணும்னு .
அதில் பையன் ஒருவர் பழையவர், ஒரு புதியவர் என்ற கணக்கில்
சரோஜினி நாயுடு அவர்களையும்
ரஸ்கின் பாண்ட் அவர்களையும் தேர்வு செய்து
அவர்களின் படங்களை பார்த்தும்...
அவர்களின் படைப்புகளை வாசித்தும் குறிப்புகள் எடுத்தான்.
scrab book ற்கு எதுவும் பிரிண்ட் அவுட் எடுக்காமலே,
அனைத்தும் நாங்களே வரைந்தும் எழுத்தியும் செய்தோம்.
வரைந்தது எனது வேலை, எழுதியது பையனின் வேலை😛
26 November 2017
17 November 2017
கைவண்ணத்தில்... விளக்கு வைக்கும் தட்டு
தமிழ் மாதங்களில் கார்த்திகை மன உறுதியை தரும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை மகாதீபம், கார்த்திகை பெளர்ணமி என விஷேசங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம்.
தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும்.
நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.
கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் நாம் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் .
திருக்கார்த்திகையை அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன் என்றும் அழைப்பதுண்டு.
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி!
விளக்கு வைக்கும் தட்டு...
இத்தகைய சிறப்பான மாதத்தில் தினமும் மாலை வாசலில் விளக்கு ஏற்றிவோம் ..
அப்பொழுது விளக்கிலிருந்து எண்ணெய் கசிந்து அந்த இடத்தை அழுக்காக்கும் ...அதனால் சிறு தட்டீன் மீது விளக்கு ஏற்றுவோம் ...
அவ்வாறு வைக்கும் தட்டை கொஞ்சம் அழகுபடுத்தி வைப்பதே ...
இன்றைய எனது கைவண்ணத்தில்...
14 November 2017
திரு இந்தளூர்...
திரு இந்தளூர் ... ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் கோயில், மாயவரம்
இந்த எம்பெருமானுக்கு சுகந்தன்- என்று பெயர்!
பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்!
அவர் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்!
அதானால் பரிமள ரங்க நாதன்!
மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட!
கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும்,
கால் மாட்டில் கங்கை அன்னையும் உள்ளார்கள்!
தாயார்: ஸ்ரீ பரிமள ரங்க நாயகி
மூலவர்: பரிமள ரங்கநாதன்
கடந்த வாரம் அங்கு நடைபெற்ற கருட சேவையின் சில படங்கள் இன்று ...
05 November 2017
31 October 2017
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பொய்கையாழ்வர் தரிசனம்...
பூதத்தாழ்வார் தரிசனம்.......
பேயாழ்வார் தரிசனம்....
இம்மூவரும் 'முதல் ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்களை நம்மாழ்வார், 'இன்கவி பாடும் பரம கவிகள்' என்று போற்றுகிறார்.
30 October 2017
பேயாழ்வார்..
பேயாழ்வார் அவதார தினம் இன்று (30.10.2017)
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
இவர் தம்மை மறந்த நிலையில்,
பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடி, பாடி..,என
எங்கும் எப்போதும் பெருமாளின் பெருமைகளையேப் பாடிக் கொண்டு பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தால்...
இவரை பேயாழ்வார் என்று அனைவரும் அழைத்தனர்....
![]() |
29 October 2017
பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வாரின் அவதார தினம்( 29.1௦.2017) இன்று..
ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
பூதம் என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது.
அதாவது, அவர் எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.
பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், (பூதம் + ஆழ்வார்) பூதத்தாழ்வார்.
28 October 2017
27 October 2017
திருவந்திபுரம் மாமுனி கோவில் உற்சவம்...
திருவந்திபுரம் மாமனி கோவில் உற்சவம்.....
நேற்றைய சுவாமி மணவாளா மாமுனிகளின் அவதார திருநட்சத்திர பதிவில் சுவாமிகளை தரிசித்தோம்.....
இன்று....
திருவந்திபுரம் ( திருவஹீந்திரபுரம் ) ..
கடலூர் மாவட்டம்...
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது...
திருவந்திபுரத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற
தேவநாத சுவாமி கோவிலும்...
அருள்மிகு ஹயக்ரீவர் ஆலயமும் அமைந்துள்ளன...
இங்கு உள்ள தேவநாத சுவாமி திருக்கோவில் நடு நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகும்.
அதன் அருகில் சுவாமி மணவாள மாமுனிகளுக்கு தனிக் கோவில் உள்ளது...
அங்கு அவரின் திருநட்சத்திர வைபவமாக நடைபெற்ற உற்சவத்தின் சில படங்கள்.. ...இன்று அப்பாவின் பார்வையாக...

ரத்தின அங்கி சேவையில் சுவாமிகள்
25 October 2017
23 October 2017
21 October 2017
தொப்பூர் ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவில்...
தொப்பூர்...
இந்த இடம் சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை இவ்வழிசெல்வதால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாகச் செல்கின்றன....
இருபுறமும் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதியாக... செடி கொடிகள் நிறைந்து காணப்படுகிறது...மிகவும் வளைவான சாலைகள் நிறைந்த பகுதி....
![]() |
17 October 2017
14 October 2017
12 October 2017
Subscribe to:
Posts (Atom)
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...