01 August 2019

விஷ்ணுவர்தனும் , மதநீகா சிலைகளும்





விஷ்ணுவர்தன் 

   கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ  துவேஷியானான். அதனால் ஸ்ரீரங்கத்தில்   ஸ்ரீ ராமானுஜருக்கு  பல தொல்லைகள்  கொடுத்தான்.  இதனால்  கூரத்தாழ்வாரின் ஆலோசனைப்படி  சுவாமி  ராமானுஜர்    வெள்ளை  சாத்தி, தமிழ்நாட்டை விட்டு   கர்நாடக தேசத்துக்கு      சத்தியமங்கலம்  வழியாக   தொண்டனூர்    வந்தார்.

            அப்போது சமண  மதத்தை  ஆதரித்து  வந்த  பிட்டிதேவன்    என்ற     மன்னன்    அந்த  இடத்தை  ஆண்டு   வந்தார் . அவரது   மகளுக்கு  சித்தபிரம்மை  பிடித்திருந்தது. அதனை  நீக்க  சமண     துறவிகளால்   முடியாமல்   போக,சுவாமி  ராமானுஜர்     உதவியால்  அப்பெண்ணின் சித்த பிரம்மை  நீங்கியது. இதைக் கண்ட   பிட்டிதேவன்   சமண    மதத்தைத்   துறந்து,  ஸ்ரீ வைஷ்ணவன்  ஆனார் .

              ஸ்ரீ ராமானுஜர்  அவருக்கு   விஷ்ணுவர்தனன்    என்ற    பெயரைச்    சூட்டினார்.  பின் விஷ்ணுவர்தன்  பல பல  வைஷ்ணவ கோவில்களை உருவாக்கினார். சுவாமி ராமானுஜரின்  வழிகாட்டலில்  சுவாமி முதலியாண்டான்  அவர்கள் பஞ்ச நாராயண ஸ்தலங்களை அவ்விடத்தில் நிறுவினார்கள்  . அதற்கு தேவையான அனைத்து  உதவியையும் அரசன் விஷ்ணுவர்தன் அளித்தார் .

அவ்வாறு அவர்கள் உருவாக்கிய அந்த பஞ்ச நாராயண ஸ்தலங்கள்-

 ஸ்ரீ கீர்த்தி நாராயணா  திருக்கோவில்,தலக்காடு
ஸ்ரீ நம்பி  நாராயண திருக்கோவில், தொண்டனுர்
ஸ்ரீ கேசவ நாராயணா திருக்கோயில் (சென்ன கேசவ ), பேலூர்
ஸ்ரீ சௌம்யா  நாராயண திருக்கோவில் , நாகமங்கலா
ஸ்ரீ வீர நாராயண திருக்கோயில்,  சாளக்கிராமம்

இந்த ஐந்து கோவிலிகளில் ஒன்றான சென்ன கேசவ கோவிலையே, நாம் இப்பொழுது கண்டு தரிசித்துக் கொண்டு இருக்கின்றோம் .

அம்பிகை 




விநாயகர் 

கேசவன் 





வராகர் 

நரசிம்மர் 






சிவன் 

இராவணன் 


பேலூர் சிற்பங்களில் காளிங்க நர்த்தனக் காட்சி, வாமன அவதாரம், நரசிம்மர் பிரகலாதன் கதை, கிருஷ்ணனால் வதம் செய்யப்படும் கம்சன், பாற்கடலில் ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு பள்ளி கொண்ட ரங்கநாதர் திருக்கோலம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


கை கொடுக்கும் யானைகள் 










விஷ்ணுவர்த்தனின் பட்டத்தரசி ஷாந்தலாதேவி சமண சமயத்தைச் சேர்ந்தவள். எனினும் வைணவத் திருக்கோயில் கட்டும் தன் கணவரின் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டாள்.

இங்கிருக்கும் மதநீகா சிலைகள் அனைத்தும் அரசியின் மேற்பார்வையில் உருவானவை .

விஷ்ணுவர்த்தனின் மகன் முதலாம் விஜயநரசிம்மன், இந்தக் கோயிலின் பராமரிப்புக்கும் பூஜைகள் நடைபெறுவதற்கும் மானியம் ஒதுக்கிய விவரங்கள் இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகின்றன.








 கோவிலை சுற்றி தாழ்வாரத்தின் கீழ் வைக்கபட்டுள்ள மதநீகா சிலைகள் அனைத்தும் அற்புதம் . ஒவ்வொரு  சிலைகளும் நிச்சயம் உயிருள்ள பெண்தான். சிலைகளில் அணிவித்திருக்கும் ஆபரணங்கள் அனைத்தும் மிக நுணுக்கமான வேலைபாடுகள் நிறைந்துள்ளன.


ஒவ்வொரு சிற்பமும் கோபம், பெருமை, மகிழ்ச்சி, துக்கம், அன்பு என பல உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

ஓர் அழகி தன் இடக்கையில் கண்ணாடி வைத்துத் தன் அழகை ரசிக்கும் சிற்பம் ,

இடது கையில் வெற்றிலை-பாக்கை மடித்து வைத்துக் கொண்டு வலது கையால் காதலனுக்குக் கடிதம் எழுதும் பெண்,

இவளது இருபுறத்திலும் பணிப்பெண்டிர் உதவி செய்கிற காட்சி,

அலங்காரம் செய்து கொள்ளும் பெண்,

தொலைவில் உட்கார்ந்திருக்கும் பறவையைக் குறி பார்த்து அம்பு எய்யும் மங்கை, என மொத்தம் 42 மதநீகா சிற்பங்கள் உள்ளன.
ஒவ்வொன்றும் அற்புத படைப்புகள்.

















முந்தைய பதிவுகள் ...




















தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்




6 comments:

  1. வணக்கம் சகோதரி

    அழகான கோவிலைப்பற்றி அறிந்து கொண்டேன். எவ்வளவு கலை நுணுக்கமான கோவில்.கோவில் உருவான கதையும் தெரிந்து கொண்டேன். பார்க்க பார்க்க திகட்டாத சிற்பங்கள்.ஒவ்வொன்றும் திறமையான சிற்பிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்லா சிற்பங்களும் கலைத்திறமையுடன் மிகவும் அழகாக இருக்கிறது.தங்கள் பதிவின் மூலம் இக் கோவிலை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்.

    பொருத்தமான பாரதியாரின் பாட்டும் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. நேரில் செல்ல இயலாதவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் இப்பதிவுகள். பேலூர், ஹலேபேட் அடுத்து சோம்நாத்பூரா?

    ReplyDelete
  3. சிற்ப சொர்க்கம். கலைக்கோவில்.

    ReplyDelete
  4. கலைப் பொக்கிஷங்கள்...
    தங்கள் பதிவின் வழியாகக் காணக்கிடைக்கும்படி செய்தீர்கள்..

    மகிழ்ச்சி.. நன்றி...

    ReplyDelete
  5. கோவில் கட்டுமானம், சிற்பங்கள் என அனைத்தும் அழகு. இங்கே செல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. சிற்பனள் வாவ்!! வெகு அழகு செதுக்கல்கள். படங்களும் அருமையா எடுத்திருக்கீங்க அனு!! சூப்பரா இருக்கு...மிக மிக ரசித்தேன் படங்களை. ஹளபேடு எனக்கும் ஆசைதான் போக ஆனால் வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை...

    கீதா

    ReplyDelete