24 August 2022

ஸர்வம் நவநீதமயம் ---- ஸ்ரீ ஜெயந்தி உத்ஸவ காட்சிகள்

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில் - ஸ்ரீ ஜயந்தி ஸ்ரீ சந்தானகோபாலன்  ஜனனம் ஊஞ்சல் சேவை.



















காஞ்சிபுரம் ஸ்ரீ பவழவண்ண பெருமாள் திருக்கோயில்  ஶ்ரீ ஜெயந்தி உற்சவம் ...













ஶ்ரீ பேரருளாளன் சந்நிதி, ஶ்ரீ ஜெயந்தி உற்சவம் ...







ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  ஶ்ரீ ஜெயந்தி உற்சவம் ...











பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து

இரண்டாம் திருமொழி - சீதக்கடல்

கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்

(11)

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்

வாள் கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான்

தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழலீர்! வந்து காணீரே! 

33



கண்ணன் பிறந்து நாலைந்து மாதங்களுக்கு

உள்ளாகவே தன் வயதிற்கு அப்பாற்பட்ட

வேலைகளை செய்யத்தொடங்கினான்.

ஒருசமயம் யசோதை குழந்தையை ஒரு

வண்டியின் கீழ், தொட்டிலில் தனியாக விட்டு

விட்டு யமுனைக்கு செல்கிறாள். அப்பொழுது

கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்ற

அசுரன் அந்த வண்டியில் ஆவேசித்து கண்ணன்

மேல் விழுந்து கண்ணனை கொல்லப்பார்த்தான்.

கண்ணனோ தன் சிறிய திருவடிகளைத் தூக்கி

வண்டியை ஒரு உதை விட்டதில் அந்த வண்டியும்

நொருங்கியது. அசுரனும் அழிந்தான்.

மற்றொரு சமயம் ஒளிகொண்ட உருவமாய்,

நிமிர்ந்த சரீரத்துடனும், கோரப்பற்களுடனும்

வந்த பூதனையின் உயிரை மாய்த்தான்.

இப்பேற்பட்ட கண்ணனின் தோள்களை வந்து

காணுமாறு அங்கிருந்த சுருண்ட கேசமுடைய

பெண்களை அழைக்கிறாள் யசோதை.



(12)

மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற

செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய

கைத்தலங்கள் வந்து காணீரே கனங்குழையீர்! வந்து காணீரே!

34



மை இட்ட பெரிய அழகான கண்களையுடைய

யசோதை, கண்ணனை வைத்த கண் வாங்காமல்

பார்த்துப் பார்த்து வளர்ப்பாளாம் . அதனாலாயே

கண்ணனின் திருமேனி அவள் கண்விழி நிறம்

அல்லது மலர்ந்த கருங்குவளைப் பூவின் நிறம்போல்

ஆகிவிட்டதோ என முன்னோர்களின் ரசனையான

கருத்தும் கூட. கண்ணன் சில சமயங்களில்

யசோதைக்கு சங்கு சக்கரங்களை கைகளில்

ஏந்தியவாறு காட்சி தருவானாம். மேலும் அவன்

கைகளில் மஹாபுருஷ லக்ஷணங்களான சங்கு

சக்கர ரேகைகள் அமைந்திருந்ததாம். கூர்மையான

நுனிகளுடைய திருச்சக்கரமும், திருச்சங்கும்

ஏந்திய கண்ணனின் உள்ளங்கைகளை வந்து

காணுமாறு, பொன்னாலான காதணிகளை

அணிந்திருந்த பெண்களை அழைக்கிறாள் யசோதை.





ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖




2 comments:

  1. பாடலும் விளக்கமும் அருமை, அனு

    கீதா

    ReplyDelete
  2. என்ன ஒரு கோஇன்சிடென்ஸ்! இங்கு உங்களுக்குக் கருத்து போட்டுட்டு எங்கள் தளத்துக்குப் போனா உங்க கருத்து அங்கு!!!!

    கீதா

    ReplyDelete