22 February 2016

மேல்கோட்டை பயணம் 1

அனைவருக்கும் வணக்கம் ....


கடந்த வாரம் நாங்கள் ஒரு நாள் பயணமாக கர்நாடகா ..மாண்டியாவில் உள்ள மேல்கோட்டை ஸ்தலத்திற்கு சென்று வந்தோம் .....அந்த பயணத்தை பற்றியும் ...மிகவும் சிறப்பான மேல்கோட்டை ஸ்தலத்தை பற்றியும் ...தகவல்களுடன்  தரிசிக்கலாம் வாருங்கள் ...

இத்தலம் தென் இந்தியாவில் கர்நாடகா மாநிலம்  , மாண்டியா மாவட்டத்தில் , பெங்களுரிலிருந்து சுமார் 140 கி.மீ ரும் , மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும்  உள்ளது.

பெங்களூர் மைசூர் ரயில் பாதையில் பாண்டவபூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். சமுத்திர மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்தில்அமைந்து.



செல்லும் வழி 














திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம்.



சுவாமி  இராமானுஜர்


            கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ஸ்ரீவைஷ்ணவ துவேஷியானான். 

            அதனால் ஸ்ரீரங்கத்தில்    ராமானுஜருக்கு       பல தொல்லைகள்    கொடுத்தான்.    இதனால்  கூரத்தாழ்வாரின்   ஆலோசனைப்படி     ராமானுஜர்    வெள்ளை    சாத்தி, தமிழ்நாட்டை விட்டு     கர்நாடக   தேசத்துக்கு      சத்தியமங்கலம்  வழியாக         தொண்டனூர்    வந்தார். 


            அப்போது   ஜைன   மதத்தை      ஆதரித்து        வந்த   பிட்டிதேவன்    என்ற     மன்னன்      இந்த    இடத்தை   ஆண்டு   வந்தார் . அவரது   மகளுக்கு சித்தபிரம்மை       பிடித்திருந்தது.  அதனை    நீக்க ஜைனத்    துறவிகளால்   முடியாமல்     போக, ராமானுஜர்     உதவியால்  அது      நீங்கியது. இதைக் கண்ட   பிட்டிதேவன்     ஜைன   மதத்தைத்   துறந்து,        ஸ்ரீவைஷ்ணவன்    ஆனார் .  ஸ்ரீ ராமானுஜர்           அவருக்கு     விஷ்ணுவர்தனன்    என்ற    பெயரைச்    சூட்டினார்.  இந்த   மன்னன்    மேல்கோட்டை  கோயிலுக்குப்   பல   உதவிகள்    செய்துள்ளார் . 

             பின் சுவாமி ராமானுஜரின்  வழிகாட்டலில்  சுவாமி முதலியாண்டான்  அவர்கள் பஞ்ச நாராயண ஸ்தலத்தை நிறுவினார் . அதற்கு தேவையான அனைத்து  உதவியையும் விஷ்ணுவர்தன் அளித்தார் . 

அந்த பஞ்ச நாராயண ஸ்தலங்கள் ....



 ஸ்ரீ கீர்த்தி நாராயணா  திருக்கோவில் ,தலக்காடு

ஸ்ரீ நம்பி  நாராயண திருக்கோவில் , தொண்டனுர் 

ஸ்ரீ கேசவ நாராயணா திருக்கோயில் (சென்ன கேசவ ), பேலூர்

ஸ்ரீ சௌம்யா  நாராயண திருக்கோவில் , நாகமங்கலா  

ஸ்ரீ வீர நாராயண திருக்கோயில்,  சாளக்கிராமம் 


 



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி    ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு (1)




இப்பதிவின்  தொடர்ச்சிகளின் இணைப்பு ...



 2 .திருநாராயணபுரம்  - செல்லுவ நாராயண  சுவாமி 

 3.செல்ல பிள்ளை   -  வைரமுடி சேவை ...


 4.சுவாமி ராமானுஜரின்  - தமர் உகந்த திருமேனி ..


 5.மலைமேல் யோக நரசிம்மர்  ஆலயம் ..



தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்

11 February 2016

தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் 3 கிருஷ்ணரும் ராதையும்


அனைவருக்கும் அழகான காலை வணக்கங்கள் ....

மீண்டும் ஒரு   தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் ... இன்றைய ஓவியத்தில் கிருஷ்ணரும் ,ராதையும் .. எனது முந்தைய பதிவில்  நீங்கள் ரசித்த  விநாயகர் இங்கே ....கிருஷ்ணர் இங்கே ...







அன்புடன் 
அனுபிரேம் 

Image result for tamil quotes


04 February 2016

தினை அடை

  அனைவருக்கும் வணக்கம் ...

தினை அடை செய்வதற்கு முன் தினையை  பற்றி .....

கி.மு. 2700 களிலேயே  சீனாவிலும்  பின்னர் சுவிட்சர்லாந்து   போன்ற   நாடுகளுக்கும் பரவியதாகவும்,    பின்னர்   இந்தியா,   ஜப்பான்,   தென் அமெரிக்கா,   வட அமெரிக்கா   போன்ற இடங்களில்   பயிரிடப்படுகின்றன.  இந்தியாவில் மட்டும்   ஆந்திரா,  குஜராத்,  தமிழ்நாடு, மகாராஷ்டிரா   மற்றும்   மைசூர்   போன்ற இடங்களில்  தினை  உணவு  தானியமாக பயிரிடப்படுகிறது.


அமெரிக்கா, மத்திய  ஐரோப்பாவில்  தீவனப் பயிராகவும்,  வளர்க்கின்றனர்.   இது  வறட்சியை  தாங்கும்  பயிர்.  இதனை  ஆண்டு  முழுவதும் பயிரிடலாம் ....



தினையின் பயன்கள்......

சிறு  தானிய  வகைகளுள்   தினையும் ஒன்று. இனிப்புச்  சுவை  கொண்டது.


உடலை  வலுவாக்கும்,  சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு.  இதற்கு  மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.


 பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.


100 கிராம் தினையில் உள்ள சத்துக்கள்


கலோரி - 331
நீர்ச்சத்து - 11.2 கிராம்
புரதச் சத்து - 12.3 கிராம்
கொழுப்புச் சத்து - 4.3 கிராம்
தாது - 3.3 கிராம்
நார்ச்சத்து - 8 கிராம்
கார்போஹைட்ரேட் - 60.9 கிராம்
பாஸ்பரஸ் - 290 மிகி
இரும்பு - 12.9 மிகி
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%

புரதம் ...


தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும்.

இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.


சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.


கொழுப்புச் சத்து....


தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.



கனிமச் சத்துக்கள்...

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை, கோதுமை, ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.



தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.


உடல் பலம் பெற....

நம் முன்னோர்கள் உணவுகளான கேழ்வரகு, கம்பு, வரகு, திணை முதலியனவாக இருந்தது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் மிகுந்த திடமாக இருந்தது. தினையில் உடலுக்கு தேவையான புரத சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதனால் திணை அரசியை சாதமாகவோ அல்லது லேசாக வறுத்து அரைத்து மாவாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல திடகாத்திரமான உடலை பெறலாம்.


வாதம் குறைய..


வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் நிலையம் அதனதன் நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியமாகும். இதன் நிலையில் எது மிகுந்தாலும் உடல் பாதிக்கப்படும். உடலில் வாதம் மிகுவதை போக்க திணை மாவு சிறந்த உணவாகும். இது வாயுவைப் போக்கி தச வாயுக்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் குணம் கொண்டது.

(செய்திகள்  அனைத்தும் இணையத்தில் இருந்து ....)

வாங்க தினை  அடை சாப்பிட போகலாம் ....


தேவையானவை .....

தினை அரிசி     - 2 ட 
க .பருப்பு             -1/2 ட 
து பருப்பு             -1/2 ட 
வர மிளகாய்     -  8
சோம்பு                --சிறிது 
பூண்டு                - 4 பல் 
உப்பு                    -  தே. அளவு 


செய்முறை ...

மேலே உள்ள பொருட்களை 3 மணி நேரம் ஊரவைத்து ....பின் அரைக்க வேண்டும் .... அந்த மாவை உப்பு சேர்த்து  மெலிதாக ஊற்றி எடுத்தால் ...தினை அடை தயார் ...


திணை 






அன்புடன்

அனுபிரேம்



27 January 2016

சூரியனும் நாங்களும் 2 .....உடுப்பி பயணம் - 5


 மால்பே கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில் எடுத்த அழகான  படங்கள் ...


முன்பு  கோகர்ண கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில்  எடுத்தவை இங்கே  ... 

















என் கணவர் 

























அப்பாவுடன் பசங்க




பெரிய பையன் 


















இத்துடன் உடுப்பி பயணம் நிறைவடைகிறது...

அடுத்த பதிவில் காவேரி ஆற்றுடன் சந்திக்கிறேன்  ...

நன்றி ..வணக்கம் ...

அன்புடன் 

அனுபிரேம் 

Image result for tamil ponmozhigal

20 January 2016

தேவாலயத்தில் ..உடுப்பி பயணம் -4

அனைவருக்கும் வணக்கம் ...


 உடுப்பி பயணம்  -4

நாங்கள் மங்களூர்  ரயில்வே நிலையம்  செல்லும் வழியில் இந்த  தேவாலயம் இருந்து ...அங்கே கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மிகவும் அழகாக செய்து இருந்தனர்  ...அந்த  படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு...






















தொடரும்

அன்புடன்

அனுபிரேம்


Image result for tamil ponmozhigal

13 January 2016

மால்பே கடற்கரை..உடுப்பி பயணம் -3

அனைவருக்கும் வணக்கம் ..

இந்த பதிவு உடுப்பி சுற்றுலாவின் தொடர்ச்சி ......

உடுப்பி கிருஷ்ணர் கோவில் 1 உடுப்பி கிருஷ்ணர் கோவில்  2


    கர்நாடக மாநிலத்தில் கோயில் நகரமான உடுப்பியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரம் இந்த மால்பே ஆகும். நாங்கள் உடுப்பியில் இருந்து பேருந்து மூலமாக இந்த கடற்கரையை அடைந்தோம் ...

         இது கர்நாடகக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் மற்றும் முக்கியமான மீன்பிடி நகரம் ஆகும். உதயவரா ஆற்றின் முகத்துவார (உப்பங்கழி) பகுதியில் அமைந்திருப்பதால் இது பிரமிக்க வைக்கும் எழில் நிறைந்த சுற்றுலா இடமாக காட்சியளிக்கின்றது.





எங்கள் படகு சவாரி 












தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்

Image result for tamil ponmozhigal