31 May 2020

துபாரே யானைகள் முகாம்

வாழ்க வளமுடன் 





முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி  நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்

14.யானை யானை ...

துபாரே யானைகள் முகாம் (Dubare Elephant Camp) மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலும்; பைலகுப்பேயிலிருந்து 26.கி.மீ. தொலைவிலும்;
குஷால் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

துபாரே, கர்நாடக வனத்துறையினரின் யானைகள் தங்கும் முக்கியமான இடம்  ஆகும்.

வனத்துறையினர் இங்கு யானைகளை வளர்க்கிறார்கள், பாதுகாக்கிறார்கள் .

காடுகளில் மரங்களைத் தூக்கி  வர பழக்கப்படுத்தவும், மைசூர் தசரா ஊர்வலத்துக்குச் செல்லவும் பயிற்சி கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முகாம்  இது.





காவேரி ஆற்றின் கரையில்  இந்த துபாரே அமைந்துள்ளது . இந்த இடத்திற்கு   ஆற்றை  படகில் கடந்து செல்ல  வேண்டும்.

 தூரம் அதிகம் இல்லை, நீர் வரத்தும் குறைவாக இருந்தால் நடந்தும் செல்லாம் .

நாங்கள் சென்ற போது  அதிக நீர் வரத்து இல்லை , பலரும் நடந்து தான்  சென்றுக் கொண்டிருந்தனர் ...அதனால் நாங்களும்   நடக்கலாம் என்று எண்ணி விசாரிக்கும் போது, அது உங்கள் own  risk என்று அங்கிருக்கும் அலுவலர் கூறினார். மேலும் இது பாதுக்காப்பானதாக எங்களுக்கும்  தோன்றாததால் நாங்களும் படகில் சென்றோம் .






நாங்கள் அங்கு செல்லும் போது  காலை 8 மணி யாரும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

ஆனால்  அப்பொழுதே படகில் செல்ல வரிசையில் நிற்க வேண்டும்,  அங்கு இரு படகுகள்  மட்டும் தான் ஆற்றை கடக்க இருக்கிறது. ஆகவே கூட்டம் அதிகம் இருந்தால்  அங்கு செல்ல இன்னும் நேரம் ஆகும்.








முகாமின் உள்ளே 









யானைகளின் படங்கள் அதிகமாக இருப்பதால் அடுத்த பதிவுகளிலும் யானையின் இனிய காட்சிகள் தொடரும் ....



அன்புடன்,
அனுபிரேம்



18 comments:

  1. இடம் அழகாய் இருக்கிறது.  எனினும் யானைகள் படத்தைப் பார்க்க ஓடிவந்து ஒரே  ஒரு யானையைக் கண்டு சென்றேன்!

    ReplyDelete
    Replies
    1. இதோ அடுத்த பதிவு முழுவதும் யானைகளின் ஆட்சி தான் ...காண வாருங்கள் ஸ்ரீராம் சார் ..

      Delete
  2. அழகான இடமாகத் தெரிகிறது. கர்நாடகத்தில் பயணம் செய்து பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது. நேரம் வாய்த்தால் செல்ல வேண்டும். பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறது என.

    ReplyDelete
    Replies
    1. ஆமா வெங்கட் சார் , அருமையான பல இடங்கள் உண்டு ...
      விரைவில் உங்கள் ஆசையும் நிறைவேறும் ..

      Delete
  3. அழகிய அமைதியான இடமாகத் தெரிகிறது, படகுச் சவாரி செய்தீங்களோ.. இதில் யானைகள் இறங்கிக் குளிப்பினமோ...

    ReplyDelete
    Replies

    1. படகு சவாரியும் உண்டு ...யானை குளியலும் உண்டு அதிரா ...

      Delete
  4. இடம் கண்ணைக் கவருகின்றது. அதுவும் குளிராக இருந்தால் இன்னமுமே நன்றாக இருக்கும்.

    யானைகளின் க்ளோசப் அதிகமில்லையே.

    ReplyDelete
    Replies
    1. நாங்க போனது டிசம்பர் மாதம் அதனால் நல்ல குளிர் தான் ...

      அடுத்த பதிவில் யானைகள் படம் வலம் வரும் சார் ..

      Delete
  5. அழகான இடம். இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது.
    யானை பார்த்தேன். காணொளி அருமை.

    ReplyDelete
  6. தங்கள் பதிவின் மூலம் துபாரே பற்றி அறிந்து கொண்டேன்...

    இயற்கைச் சூழலில் யானைகளைப் பார்ப்பது எவ்வளவு இனிமை...

    நலம் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. ஆம் இனிமையான இடம் ...

      Delete
  7. அழகான இடம்.இயற்கையான இடங்கலை பார்ப்பதும் அழகு. படங்கள் எல்லாமே அழகு..உங்க மகன்தானே? அழகா போஸ் கொடுக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா அம்மு ,சின்னவர் தான் போஸ் தரது ...

      Delete
  8. படகு சாவடியில் சென்று பார்ப்பது இனிய அனுபவம் தான்.
    நமது நாட்டில் பின்னவள என்னும் இடத்தில் யானைகள் சரணாலயம் இருக்கிறது. நிறைய யானைகள் இருக்கின்றன. இயற்கை சூழலில் அவை திரிவதையும்,ஆற்றில் குளிப்பதையும் கண்டு களிக்கலாம்.அவற்றுக்கு உணரவேண்டும் நேரம் நாமும் முன் அனுமதி பெற்று பால் ஊட்டலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா ...
      பின்னவளம் பற்றி பல படங்கள் கண்டு ரசித்து இருக்கிறேன் ..மிக பெரிய முகாம் அது ...

      Delete
  9. கூர்க் சென்ற போது நேரமின்மையால் காணத் தவறிய இடம். வாய்ப்புக் கூடி வந்தால் இங்கே செல்ல வேண்டும்.

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா ...

      நீங்கள் இங்கு செல்லும் வாய்ப்பு விரைவில் அமையட்டும் ...

      Delete