10 April 2022

ஸ்ரீ ராம நவமி - எளிய வரிகளில் இராமாயண நிகழ்வு......


 ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ...

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....


பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - ஸ்ரீ ராமனின் அவதார  நாள்.  இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம்.  







எளிய வரிகளில் இராமாயண நிகழ்வு......

திரேதாயுகத்தில் மகாவிஷ்ணு தேவர்களுக்கு முன்பே கூறியபடி தசரத மன்னரின் மகன் ராமனாக அவதரித்தார்.





விஸ்வமித்ரர் கேட்டுகொண்டபடி, இளமையிலேயே அவருடன் சென்று அவரது வேள்விக்கு இடைஞ்சலாக இருந்த சபகோடசுர தாடகை என பலரை அழித்து, அவரிடம் பல அஸ்திர மந்திர ப்ரயோபங்களை கற்று அவர் வழிகாட்டிய படியே ....

ஜனகரின் நாடான மிதிலாபுரி சென்று ,

ஜனகரின் மகளான ஜானகியின் ஸ்வயம்வரத்தில்,

 பல நாட்டு வீர தீர சூர மன்னர்களால் துளியும் நகட்டி நாண் ஏற்ற முடியாத சிவதனுசை அனாயசமாக நாணேற்றி வெற்றிபெற்று இளவரசியான சீதாவை மணம் முடித்தார்,




மிதிலாபுரியில் இருந்து அயோத்தி திரும்பி வரும் வழியில் சத்திரியர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பரசுராமரின் விஷ்ணுதனுசையும் முறித்தார்,

அயோத்தி வந்த சீதாராமனை வரவேற்ற ஜனகமகாராஜா மக்கள் கோரிக்கை படி ஶ்ரீராமனுக்கு முடிசூட்ட எண்ணி, 

வசிஷ்டர் உட்பட பெரியவர்கள் மூலம் அதற்காக நாள் குறிக்க, 

மந்தரை என்ற சேடிபெண் பேச்சை கேட்டு தசரதனின் மனைவியருள் சிறந்தவளான கைகேகி தன் மகன் பரதனுக்கு நாடாளும் மன்னனாக முடிசூட்ட ஶ்ரீராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும் என கேட்க,

கைகேயின் வார்த்தையால் மூர்ச்சையான தசரதன் மூர்ச்சை தெளிந்து, ஶ்ரீராமனிடம் கூற 

மகிழ்வுடன் அதனை ஏற்ற ஶ்ரீராமன் கானகம் கிளம்ப,

 உடன் அவனது அனுஜனான லக்குமணனும் கிளம்ப,

 இதை கண்ணுற்ற சீதா தேவி ராமனிருக்குமிடமே எனக்கு அயோத்தி என கிளம்ப,




அயோத்தி தாண்டி கங்கைகரை வந்த ஶ்ரீராமன்,

 படகோட்டி குகனிடம் நட்பு கொண்டு தனயனாக ஏற்று கங்கையை கடந்து வானந்திரத்தை அடைய,




தசரத சக்ரவர்த்தி ஶ்ரீராமனை ஜானகியை லக்குமணனை பிரிந்த துயர் தாளாமல் 

தன்னுயிரை விட,

தாயாரின் கோரிக்கையும் ஶ்ரீராமன் கானகம் சென்றதையும் மன்னர் தசரதர் உயிர் துறந்த செய்தியை அறிந்த பரதனும் (சத்ருக்கணனும்) கைகேகியை பலவாற தகாத வார்த்தையில் பேசி,

வஸிஷ்டர் உட்பட மந்திரி உட்பட சேனைகளுடன் கானகம் சென்று ஶ்ரீராமனை சீதாதேவியை பணிந்து நடந்தவைகளை கூறி  கைகேகிக்காக தான் மன்னிப்பு கேட்பதாக கூறி,

 ஶ்ரீராமர் மீண்டும் அயோத்தி வர வேண்ட,

 மறுத்தளித்த ஶ்ரீராமனிடம் அவரது இரண்டு பாதுகைகளையும் பெற்றுகொண்டு திரும்ப,




கானகத்தில் ஶ்ரீராமனின் அழகை கண்ட சூர்பனகை என்ற அரக்கி, தான் ஒரு அழகான பெண்னுரு கொண்டு ஶ்ரீராமனை திருமணம் செய்ய கேட்டு அணுக,

 அருகில் இருந்த இலக்குமணன் அவளின் காதையும் மூக்கையும் பங்கபடுத்த,




கோபமுற்ற சூர்பனகை தன் அண்ணனான இலங்கை மன்னன் இராவணனிடம் சீதையின் அழகை புகழ்ந்து அவள் உனக்கானவள் என உரு ஏற்ற, 

இராவணன் மாரிசன் என்ற அரக்கனை பொன்மானாக மாற செய்து,

 ஶ்ரீராமர் இருக்கும் வனத்தில் உலாவர சீதாதேவியன் மனம் பொன்மானை விரும்ப,




 அதை நிறைவேற்ற ஶ்ரீராமன் அந்த பொன்மானை பிடிக்க அதனை துரத்த,

 தாயர் இலக்குமணனை ஶ்ரீராமருக்கு ஆபத்து போல் தெரிகிறது என அவரையும் அனுப்ப,

தாயாரின் கட்டளையை ஏற்ற லக்குமணன் தன் அம்பால், அவரை கோடு போட்டு தாயே எக்காரணம் கொண்டும் இக்கோட்டை தாண்டாதீர் என கூறி ஶ்ரீராமனை காண போக,

இதுதான் சந்தர்ப்பம் என எண்ணிய இராவணன்,

 தாயாரை தன் பேச்சு சாதுரியத்தல் அந்த கோட்டை தாண்ட செய்து 

சிறைபிடித்து இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைக்க ,




பொன்மான் ஒரு அரக்கன் என அறிந்து தாயரைக்கு என்ன ஆபத்து என ஒடிவந்த ஶ்ரீராமனும் இரக்குமணனும் தாயாரை காணாமல் தேடி அலைய,

இராவணன் சீதாதேவியை சிறைபிடித்து சென்றதை கண்டு அவனுடன் போரிட்டு, இறக்கைகளை இழந்த பறவைகளின் அரசனான ஜாடாயு,

 சீதாதேவியை தேடிவந்த இராமலக்குமணரிடம் விபரம் கூறி

 இராமனின் மடியிலேயே உயிரை விட,


ஜாடாயுவான பறவைக்கு தன் தகப்பனுக்கு செய்வது போல் அந்திம க்ரியைகளை செய்தபின்,

கானகத்தில் தேடி புறப்பட்டு சபரிஎன்ற வேடுவபெண் தந்த கனிகளை உண்டு அவளுக்கு மோட்சத்தை தந்து,

 அவளின் கைகாட்டுதலில் படியே மலையில் ஒளிந்துள்ள சுக்ரீவனை அவனின் நண்பனான ஹனுமன் உதவியால் கண்டு,

சுக்ரீவனும் தன்னைபோல் மனைவியை தன் அண்ணன் வாலியிடம் பறிகொடுத்தவன் என அறிந்து,

 அவனுக்காக வாலியிடம் மறைந்து இருந்து போர்செய்து,

 பின் வாலிக்கு தர்சனம் தந்து சொர்கம் அருள,

ஶ்ரீராமன் அதற்க்கு செய்த உதவிக்கு கைமாறாக தேவி சீதாவை தேடிதர வானரவீரர்களை நாலாபுறமும் அனுப்ப,

சுக்ரீவனுடன் தனக்கு நட்பு ஏற்பட காரணமான ஹனுமனிடம் ஶ்ரீராமன் தன்  கனையாழி தர,


சீதாதேவியை தேடி அலைந்த ஹனுமன் தென்திசையில் உள்ள மகேந்திரபர்வதத்தை அடைந்து அங்கே உள்ள சமுத்திரத்தை எப்படி தாண்டுவது என யோசிக்க,

ஜாம்பவான் ஹனுமனின் இளமை கால வீர தீர பராக்குரமத்தை கூறி இப்போதும் அதுபோல் செய்க என தூண்ட,

ஜாம்பவானின் தூண்டதலீல் புத்துணர்ச்சி அடைந்த ஹனுமன் மகேந்திரமலை அதிர பெரிய உருக்கொண்டு எம்பிதாவி கடலை கடக்க வானவீதியில் பறந்து செல்ல,

கடலில் மேருமலை ஹனுமனை வணங்கி இளைபாற வேண்ட அதனை மறுத்து செல்லும் போது, 

கடலில் தோன்றிய அரக்கி ஹனுமனை விழுங்க எத்தனிக்க,

 அவள் வாயுள் பெரிய உருவமாக சென்று உருவத்தை குறுக்கி காதுவழியாக வெளியே வர அவளின் ஆசிகளையும் பெற்றுகொண்டு இலங்கை நோக்கி பயணிக்க,

இலங்கையை அடைந்த ஹனுமன் இலங்கையின் காவல் தெய்வமான பெண்ணை ஒரே அடியில் வீழ்த்தி அவளின் ஆசியுடன் இலங்கையுள் நுழைந்து சீதையை தேட,




இலங்கையின் மன்னனான இராவணனின் அந்தபுரம் முதல் அனைத்து இடமும் தேட,

அங்கே அந்தபுரத்தில் மண்டோதரியை கண்டு ஓ... இவள் தான் சீதையோ என எண்ணி பின் அவளின் செயலை கண்ணுற்று ஓ  இவளல்ல என உணர்ந்து அரண்மனையில் காணமல்,

அரண்மனையின் அருகே உள்ள தோட்டமான அசோகவனத்தில் ஒரு மரத்தின் அடியில் அரக்கிகள் புடைசூழ அமர்ந்துள்ள சீதாதேவியை கண்டபோது,

இராவணன் தன் தேவியர் சூழ சீதாதேவியின் இருப்பிடம் வந்து தன்னை மணம் செய்ய வேண்ட,

 சீதாதேவி அவனை எச்சரித்து கடுமையாக கடிந்துகொள்ள கோபத்துடன் திரும்பி சென்ற இராவணனையும்,

அசோகவனத்தில் சீதாதேவியின் கையறு நிலையுணர்ந்து அரக்கியர் உறங்கும் வரை தாமதித்து சீதையின் காதுபட ஶ்ரீராமசரிதம் கூற,

ஶ்ரீராமனின் சரிதம் கேட்டு தன் உயிரை மாய்த்துகொள்ள எண்ணம் கொண்டிருந்த சீதை மனம் மாறி சுற்றும் முற்றும் காண,

அங்கே மரத்தின்மேல் வானரம் ஒன்று இருப்பதை அறிந்து,

 ஓ இதுவும் இராவணின் மாயை என எண்ண,

 மெதுவாக கீழிறங்கி வந்த ஹனுமன் தனது ஶ்ரீராமதூதனாக வந்த காரணத்தை விளக்கி ஶ்ரீராமனின் கனையாழியை கொடுக்க,


ஶ்ரீராமனின் கனையாழியை கண்ட சீதாதேவி ஆனந்த மிகுதியால் ஹனுமனை பாராட்டி கையில் கிடைத்த இலையால் அர்சித்து வாழ்த்த தாயாரிடம் ஶ்ரீராமரின் நிலையை கூறி,

 விரைவில் வானரசேனையுடன் இலங்கை வந்து தங்களை மீட்பார் என கூறி,

 தான் தாயாரை பார்த்த விஷயத்தை ஶ்ரீராமனிடம் கூற அடையாளம் ஏதேனும் தரவேணும் என கேட்க, தாயார் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த சூடாமணியை தர அதனை பெற்ற ஹனுமான்,

சீதா தேவியிடம் அடையாளம் பெற்று கொண்டோம் ,

அந்த இராவணனையும் பார்த்து செல்வோம் என எண்ணி 

அந்த அசோக வனத்தின் மற்றொரு பகுதியில் சமம் கர்ஜனையுடன் துவம்சம் செய்ய,

 சீதையின் அருகில் இருந்த அரக்கியர் கூட்டம் பயந்து ஓடி இராவணனிடம் முறையிட,

ஒரு வானரத்தை கண்ட பயந்தீர்கள் என எள்ளி நகையாடி தன் வீரர்களை அனுப்பி வானரத்தை விரட்ட சொல்ல,

அசோகவனத்தில் தன்னை விரட்ட வந்த வீரர்களை வரிசையாக கொன்றும் விரட்டியும் அட்டகாசம் செய்ய,

 ஒரு கட்டத்தில் தானே கிளம்ப அதை தடுத்த இராவணனின் மகன் இந்திரஜித் தான் போய் பிடித்து வருவதாக கூறி சென்று, ஹனுமனிடம் போரிட ஹனுமனின் வீரியம் தாங்காமல் பிரம்மாஸ்திரத்தை ஹனுமன் மேல் ஏவ,

பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுபட்ட ஹனுமன் அரக்கர்கள் இழுத்த இழுவைக்கு எல்லாம் கட்டுபட இராவணனது அரச சபைக்கு இழுத்து செல்லபட்டு இராவணன் முன் நிறுத்த, 

இராவணன் அரியனையில் அமர்ந்து தன்னை நிற்கவைத்துள்ளதை விரும்பாத ஹனுமன்,

 தன் வாலினாலே தனக்கும் ஆசனம் ஏற்படுத்தி கொண்டு அமர,




இராவணன் சபையில் இராவணனிடமே சீதாதேவியை இராமனிடம் ஒப்படைக்காவிட்டால் அவன் அழிவது உறுதி என கூறி, இராவண சபையையே திக்குமுக்காட செய்தபோது,

ஹனுமனின் வார்த்தையால் கோபமுற்று ஹனுமனை கொல்லும்படி ஆணையிட,

இராவணனின் தம்பி விபிடணன் இராவணனிடம், தூதுவனை கொல்லாதே அவன் எதிரியிடம் போய் நம்மை பற்றி சொல்ல வேண்டும் எனவே அங்க பங்கம் படுத்து என கூற,

இராவணன் ஓ என்முன்னே வாலை சுருட்டி ஆசனமக அமர உதவிய அந்த வாலுக்கு தீயை வையுங்கள் என கட்டளையிட,

இராவணனின் கட்டளையால் வாலுக்கு தீவைக்கப்பட்டதும் ஹனுமன் தன் உருவத்தை பெரிதாக்கி வாலை நீட்டி தான் செல்லும் இடமெல்லாம் தீயைவைக்க இலங்கையே ஜெகஜோதியாய் எரிய,




சமித்திரத்தில் தீயை அனைத்துகொண்டு சீதாதேவியை வணங்கி விடை பெற்று ஶ்ரீஇராமன் இருக்கும் இடம் நோக்கி விரைய,

கிஷ்கிந்தாவில் தன் வரவை எதிர்பார்த்து காத்துகொண்டுள்ள வானரவீரர்களிடம் நல்ல செய்தியை சொல்லி மகிழ்ச்சியில் கிஸ்கிந்தாவை  களபரீகம் செய்ய கிஷ்கிந்தீ காவலன் ஓடி சென்று மன்னனான சுக்ரீவனிடம் ஹனுமனும் வானரங்களும் செய்யும் சேட்டையை சொல்ல,

சுக்ரீவன் அருகில் இருந்த ஶ்ரீராமனிடம் பிரபு சீதாதேவி இருப்பிடம் தெரிந்துவிட்டது போல் உள்ளது இல்லையேல் வானரங்கள் எம் தோட்டத்துக்கு சேதம் விளைவிக்க எண்ணியிராது என கூறி காவலனுடம் உடனே ஹனுமனை என்னை வந்து பார்க்கசொல் என கூற,

சுக்ரீவன் ஆனையை ஏற்ற ஹனுமன் பறந்து வந்தபடியே,

 கண்டேன் சீதாதேவியை என கூறி ஶ்ரீராமனையும் சுக்ரீவனையும் பணிந்து வணங்கி நடந்தவைகளை கூறி சீதாதேவி தந்த சூடாமணியை சமர்பிக்க,

  ஆனந்தந்தின் எல்லைக்கே சென்ற ஶ்ரீராமன் ஹனுமனை கட்டிதழுவி பாராட்ட,




சுக்ரீவனோ இராமனின் ஆனைபடி வானரசேனையுடன் ஶ்ரீராம லக்குமணர் முன்னே செல்ல இலங்கை நோக்கி பயணம் புறப்பட,

வானரசேனையும் இராமலக்குமணர்களும் சேதுசமுத்திர கரையை அடைந்து கடலை எங்கனம் கடப்பது என யோசிக்க,

ஶ்ரீராமன் கடலரசனை வேண்ட அவன் வராத்தை கண்டு கோபமுற்று,

 கோதண்டத்தில் கடலை வற்ற செய்ய எண்ணம் கொண்டு வாளை ஏற்ற,

 ஓடிவந்த கடலரசன் ஶ்ரீராமனுடம் மன்னிப்பு கேட்டு ஶ்ரீராம்பாணத்தை தடுக்க,

கடலரசனின் யோசனைபடியே கடல்மீது கல்லால் அணைகட்டி அக்கரைசெல்ல முடிவெடுத்து அணைகட்ட,

ஶ்ரீராமனின் அணைகட்டும் வேலைக்கு அந்த பகுதியில் இருந்த விலங்குகள் பறவைகள் கடலில் உள்ள மீன்கள் என எல்லாமே உதவிபுரிய,


 

ஆனந்த மிகுதியால் ஶ்ரீராமன் தன் உடலை கடல் நீரில் நணைத்து கடல் மண்ணில் புரண்டு அந்த மண்ணை அணையின் மேல் உதிர்க்கும் அணிலை வாரி எடுத்து தடவி உச்சிமுகர அணைவேகமாக இலங்கையை நோக்கி உருவானது,

ஹனுமனின் வருகையையும் இலங்கைக்கு நெருப்பு வைத்ததையும் எடுத்துகூறி,

 சீதாதேவியை ஶ்ரீஇராமனிடம் ஒப்படைப்பதே உசிதம் என கூறிய விபிடணனை இராவணன் இலங்கையை விட்டு விரட்ட,

 விபிடணன் சேதுகரையில் இருந்த ஶ்ரீராமனிடம் தஞ்சம் புக,

 ஶ்ரீராமர் வானர வீரர்கள் சுக்ரீவன், ஹனுமன் ஆகியோரிடம் யோசனை கேட்டு இறுதியில் விபிடணனுக்கு அபயம் தர வானர சேனை அணையின் மீது பயணம் செய்து இலங்கையை அடைந்தது,

இலங்கை சென்ற ஶ்ரீராமன் வாலியின் மகன் அங்கதனை இராவணினிடம் தான் போருக்கு வந்துள்ள விபரம் தெரிவிக்கவும்,

அதே நேரம் சீதையை ஒப்படைத்தால்  போர் இல்லை என தகவல் சொல்லவும் அனுப்ப,

திரும்பி வந்த அங்கதன் இராவணன் போருக்கு மட்டுமே தயார் எனவும் சீதாதேவியை ஒப்படைக்க மறுப்பதாகவும் கூற,

அதே நேரம் அரண்மனை மாடத்தில் இருந்து ஶ்ரீராம சேனையை பார்க்க வந்த இராவணனை கண்ட சுக்ரீவன் ஒரே தாவலில்  சென்று இராவணனிடம் சண்டை  புரிய இருவருமே சம பலகொண்டு பிரிய,

திரும்பி வந்த சுக்ரீவனிடம் வானரசூரா நீர் இப்படி செய்தது தகாது இதில் உமக்கு ஏதேனும் ஆகியிருந்தால் உமது வானரசேனைக்கு என்ன பதில் சொல்ல முடியும் எனவே,

 இனி  எந்த வீரரும் தனியாக சென்று போரிட கூடாது நாம் ஒன்றாகவே ஒரு தலைமையின் கீழ் நின்றே போரடவேண்டும் என கூற அவ்வாறே முடிவாயிற்று, 

சீதாதேவியை மீட்க ஶ்ரீராம சேனையும் இராவணனின் அரக்கர் சேனையும் பலமாக மோதின,

இரண்டு சேனைகளிலும் பல ஆயிரம் வீரர்கள் வீரமரணமடைய ஶ்ரீராமனின் சேனையில் அங்கதன், கும்பன், நிகும்பன், சுக்ரீவன் என பலர் அரக்கர் சேனையை துவம்சம் செய்ய, 

ஒரு சமயம் இலக்குமணன் உட்பட வானரசேனையே மயக்கமுற ஜாம்பவனின் யோசனையை கேட்டு சஞ்சீவி பர்வதத்தில் மூலிகை தேடி புறப்பட்ட ஹனுமன் நேரக்குறைவை அறிந்து சஞ்சீவ பர்வதத்தையே பெயர்த்து தூக்கி வந்து இலக்குமணனையும் மற்றவர்களையும் மூர்ச்சை தெளிவிக்க, 





இதையறிந்த இராவணின் மகன் இந்திரனையே வென்றவன் மாயபோர்புரிவதில் வல்லவனான இந்திரஜித் போர்புரிய வர,

லக்குமணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடுமையாக போர் நடக்க மாயாவி இந்திரஜித் இராமபிரானை எதிர்கொண்டான்,

அவனது எந்த மந்திர மாய்மாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான்,

பரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன், மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார் எனவே நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டார் கூடவே லக்ஷ்மணனும்,

 ஶ்ரீராமனும் இலக்குமணனும் மயங்கி விழுந்ததை வானில் இருந்து கண்ட நாரத மகரிஷி பார்த்து பதறிப்போய்,

பகவானின் வைகுண்டம் போய் கருடனிடம் இராமபிரானை இந்திரஜித்தின் நாகபாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும், நீ உடனே சென்று இராமபிரானை காப்பாற்று என்று கூற, 

கருட பகவான் அங்கிருந்து பறந்துவந்து தன் சிறகுகளால் நாகஸ்திரத்தின் மீது வீசி ஶ்ரீராம லக்குமணர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்,

இரவாண ஶ்ரீராம யுத்தத்தில் இந்திரஜித்தை விபிடணன் கண் முன்னே இலக்குமணன் அழிக்க, அவனை தொடர்ந்து வந்த கும்பகர்ணன் என பலரை ஶ்ரீராமனும் இலக்குமணன் சுக்ரீவன் அங்கதன் ஜாம்பவான் ஹனுமன் உள்ளிட்ட வானர சேனை அரக்கர் சேனையை துவம்சம் செய்ததையும்,

இறுதியாக பத்து தலையும் இருபது புஜங்களுடனும் ஒரு பெரிய மேருமலையே போர்களத்துக்கு வந்தது போல் மிஞ்சிய அரக்கர் சேனைகளுடன் தேரில் வர,

அவனது கம்பீரத்தை தோற்றத்தை பார்த்து ஆனந்தமடைந்த ஆகா எப்பேற்பட்ட வீரன் என மகிழ்ந்து அதற்கேற்ப்ப போர் புரிந்து அவனது தேர் குதிரைகள் ஆயுதங்கள் அஸ்திரங்கள் மகுடம் என எல்லாவற்றையும் அழித்து ,


இராவணா மன்னிப்பு கேள் இல்லை என்றால் இன்றுபோய் நாளை வா என கூற,

மன்னிப்பு கேட்க மறுத்து ராவணன் தன் இருப்பிடம்  திரும்ப,

இராவணன் இதற்கிடையே மாயையினால் இராமரின் தலையை போரில் கொய்தது போல் ஏற்பாடு செய்து சீதையிடம் காட்ட,

 மயக்கமுற்ற சீதாதேவி பகவானை பலவாறாக வேண்ட அங்கே உடன் இருந்த மண்டோதரி சீதாதேவியை ஆறுதல் படுத்தி, தாயே அது இராவணன் செய்யும் மாயை உன் கற்பினுக்கு எந்த பங்கமும் இல்லாமல் உம் ராமன் உம்மை மீட்டுசெல்வார் கவலைவேண்டாம் என தேற்ற,

மறுநாள் யுத்தகளத்தில் ஶ்ரீராமன் இராவணனின் பத்து தலையும் இருபது தோளும் அவன் பராகரமத்தையும் தன் கோதண்டத்தால் வீழ்த்த ஶ்ரீஇராம இராவண யுத்தம் முடிந்தது,

ஶ்ரீராமர் ஹனுமனை அழைத்து ஏ வாயுமைந்தா போய் தாயார் சீதையிடம்  நம் வெற்றியை சொல்லி சந்தோஷபடித்தி தக்க மரியாதையுடன் அழைத்துவா என கூற,

வாயு மைந்தன் வாயு வேகத்தில் சென்று சீதாதேவியிடம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் என ஆனந்த கூத்தாட,

விபிடணன் சுக்ரீவன் உட்பட்ட முக்கிய வீர்ர்களும் சீதாதேவியின் இருப்பிடம் வந்து வணங்கி ஶ்ரீஇராமனின் கட்டளையை கூற ,

சீதாதேவி எல்லை இல்லா மகிழ்வுடன் தன்னுடன் இருந்த மண்டோதரி உட்பட அரக்கியர்களை கட்டிதழுவி பலவாறான வார்த்தைகளால் அவர்களை ஆசீர்வதித்து தன்னை ஒழுங்குபடுத்தி கொண்டு வீரர்களுடன் ஶ்ரீராமனை காண வர,

ஶ்ரீராமரோ இலக்குமணனை நோக்கி ஏ இராமானுஜா உன் தாயாரான சீதாதேவியை அக்னிபிரவேசம் செய் விக்க அக்னியை தயார் செய் என கட்டளையிட,

தனயன் சொல்லே தகப்பனை சொல் என செயல்பட்ட இளவளும் அவ்வாறே அங்கேயே  அக்னியை பிரதிஷ்டை செய்ய,

தசரத மைந்தர்கள் வானரசூரர்கள் இலங்கையின் பிரஜைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் பிரும்மா, ருத்ரன் மற்றும் உள்ளவர் கண் முன்னே ஈரேமு பதினான்கு லோகமும் கட்டி ஆளும் தாயார்,

 ஏதோ நீர் நிறைந்த குளத்தில் இறங்குவது போல் இறங்கி ஸ்வர்ண வர்ணமாக ஜொலித்தபடி வெளியே வர ஶ்ரீராமன் மகிழ்வுடன் கைபிடித்து அழைத்து வந்து, 

விபிடணனுக்கு இலங்கை வேந்தனாக மகுடம் செய்வித்து, 

இளவலுடனும் தாயார் சீதாவுடனும் வீபிஷணன், சுக்ரீவன், ஹனுமன், ஜாம்பவான் உள்ளிட்ட வானர சேனையுடனும் புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி புறப்பட  ஆயத்தமாக்கும் முன் ராமரின் முகம் வாடி இருக்க மனம் தடுமாற,

இராவணவதத்திற்கு பின் இலங்கை நகரம் சோபையே இல்லாமல் கலைஇழந்து காணப்படுகிறதை கண்டு வருந்தி தன் அருகிலிருந்த சீதாதேவியை, 

தேவி திருமகளான உனது கடைக்கண் ஆனந்தமாக இலங்கையை கடாச்சித்து இலங்கைக்கு நல் அருள் புரியவேண்டும் என்றுகூற,

திருமகளான சீதாதேவி ஆனந்த பார்வையால் இலங்கை நகரை நோக்கி அதை மீண்டும் பொலிவு பெறச்செய்தாள், 

அதைகண்டு ஆனந்தித்த ஶ்ரீராமர் புஷ்பக விமானத்தை கிளப்ப சொல்ல,




விமானம் செல்லும் வழியில் எல்லாம் ஶ்ரீராமர் சீதாதேவிக்கு வானரங்களை சந்தித்த இடம், அணைகட்டியிடம் ஜாடாயுவை சந்தித்த இடம் ,சபரிக்கு மோட்சம் கொடுத்த இடம், என ஒவ்வொன்றாக காட்டிகொண்டே வந்தவர் விமானத்தை பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் இறங்க செய்து,

ஹனுமனிடம் ஹே அஞ்சனை மைந்தா நீ போய் அயோத்தியின் அருகே உள்ள நந்திகிராமத்தில் பரதன் என்ற என் இளவலிடம் ஶ்ரீராமர் தம்பியுடனும், தாயாருடனும் வந்து கொண்டு உள்ளார், தற்போது பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் உள்ளார் என கூறிவா என அனுப்ப,

அயோத்தி அருகே உள்ள நந்திகிராமம் சென்ற ஹனுமன் அங்கள் ராமரைபோன்று ஒருவர் (பரதன்) ஒரு அக்னிமூட்டி அதை வலம் வருவதை கண்டு அவர் தான் பரதனாக இருக்க வேண்டும் என எண்ணியவாறே ஜெய் ஶ்ரீராம் என சப்தமிட,

அக்னியை வலம் வந்த பரதன் ஶ்ரீராமநாமாவை கேட்டு ஆனந்தத்துடன் ஆகாயத்தை நோக்க ஹனுமன் இறங்கி வந்து பணிந்து இராமனின் வரவை கூற,

நந்திகிராம் மட்டுமல்ல ஶ்ரீராமர் திரும்பும் விபரம் அயோத்திவரை சென்று சேர மொத்த ஊரும் ஶ்ரீராமனையும் இலக்குமணனையும் தாயாரையும் வரவேற்க்க விழாகோலம் பூண்டது,

பரதனிடம் தகவலை கூறி சிறிது நேரம் இருந்துவிட்டு ஶ்ரீராமரை காண விரைந்த ஹனுமன் ஶ்ரீராமருடனும் அவரது பரத்வாஜ முனிவர் ஆஸ்ரமத்தில் இருந்த பரிவாரங்களுடனும் அயோத்தி வந்தடைய,

அயோத்தி வந்து அடைந்த ஶ்ரீராமர் விமானத்தில் இருந்து இறங்கி பரதன், சத்ருகனை விட்டு நேராக கைகேயி தாயாரின் காலில் விழுந்து ஆசிவேண்ட,

கதறி அழுத்தபடி கைகேயி ஶ்ரீராமனை வாரிஅணைத்து, ஶ்ரீராமனை கட்டி அணைத்து கொண்டு ஹே ராமா உன்தாயாரான கோசலை காலில்  சென்று விழு நான் மகாபாபி உன்தாய் மிகுந்த பாக்யவதி என கூற,

கைகேயியை அழைத்துகொண்டே தாயார் உட்பட அனைவருடமும் ஆசிகளை பெற்று, 

அயோத்தி என்னும் அணிநகரத்தில் வசிஷ்டர் விஸ்வாமித்ரர் விபிஷணன் சுக்ரீவன் ஹனுமன் உள்ளிட்ட பலர் கூடிய சபையில்,

மக்களுக்கும் மகான்களுக்கும் பிராமணர்களுக்கும் வேண்டிய அளவு தானங்களை செய்து, 

இலக்குமணன் குடைபிடிக்க,

 பரதனும் சத்ருகணனும் இருபக்கமும் கவரிவீச,

 அங்கதன் உடைவாளை காவலாளியாக ஏந்தி நிற்க,

 ஹனுமன் திருவடியை தாங்க பட்டு பீதாம்பர ஆடையுடனும்,

 மங்களகரமான தாயார் சீதாதேவியுடன் தாய்மார்கள் உற்றோர் வாழ்த்த, 

மங்களவாத்யங்கள் வேதங்கள் முழங்க தேவர்கள், கந்தர்வர்கள் பூமாரி பொழிய குலகுரு வஷிஸ்டர் சூட்டிய மணிமுடியை ஏற்றுக்கொண்டார், 

ராமபிரான் பட்டாபிஷேகம் மக்கள் மனம் மகிழ நடைபெற்று, அனைவரும் சீரும், சிறப்பும் பெற்றனர் ...


ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய சீதாராமா 

ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமன்  அருள் கிடடும்

ஜெய் ஶ்ரீராம் !!  ஜெய் ஆஞ்சநேயம்!!







பெரிய திருமொழி

பத்தாம் பத்து

மூன்றாம் திருமொழி - ஏத்துகின்றோம்


                                                           இராமவதாரத்தில் ஈடுபாடு – 2


வென்றி தந்தோம், மானம் வேண்டோம், தானம் எமக்காக *

இன்று தம்மின் எங்கள் வாழ்  நாள், எம் பெருமான் தமர்காள்!  *

நின்று காணீர் கண்கள் ஆர, நீர் எம்மைக் கொல்லாதே *

குன்று போல ஆடுகின்றோம் குழமணி தூரமே.


5 1872

கல்லின் முந்நீர் மாற்றி வந்து, காவல் கடந்து * இலங்கை 

அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை, அமர்க்களத்து *

வெல்லகில்லாது அஞ்சினோம் காண், வெம் கதிரோன் சிறுவா! *

கொல்லவேண்டா, ஆடுகின்றோம் குழமணி தூரமே. 


6 1873

















ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம்....
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


அன்புடன் 
அனுபிரேம் 💖💖

2 comments:

  1. நேற்று பார்த்தேன் கமென்ட் போட்டேனே ...இல்லையோ போடாமல் போய்விட்டேன் போல...நல்லாருக்கு படங்களும் மொத்த ராமாயண வரிகளும்

    கீதா

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு. படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete